Moving to www.karthiteach.com

Friday, December 25, 2015

நல்ல தலைவர்களே இல்லையா தமிழ்நாட்டில்?
சென்னை சந்தித்த கொரூர அனுபவதிற்குப்பிறகு மக்கள் எதிர்கொள்ளும் அடுத்த போராட்டம் இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத்  தேர்தல். வந்து சென்ற வெள்ளம் வீடுகளை நாசம் செய்ததோட அல்லாமல் மக்களின் மனதையும் சிந்திக்க வைத்து விட்டுச் சென்றது. அரசியல் கட்சிகள் அனைத்தின் உண்மையான சொரூபதைக்கண்ட அனைவரையும்  "இப்படிக்கூடவா இருபிங்க ! நீங்கலாம் உருபடவே மாடிங்கடா !" என்று சபிக்க வைத்தது. "இருங்கடா! தேர்தல் வரட்டும், அப்ப இருக்குது  எல்லாருக்கும்" என்று கோபத்தை தேர்தல் வரை அடக்கி வைத்திருக்கும் மக்களுக்கு இப்போது பிரச்சனையாக இருப்பது ஒன்றுதான். தண்டனை தரவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டோம் . யாருக்கு தண்டனை தருவது ? யாரை ஆட்சியில் அமர்த்துவது ?  கேள்விகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன .

மற்றவருக்கு வாய்புக்கொடுப்போமே !

பல ஆண்டுகளாக நம் தமிழ்நாட்டை ஆண்டு வரும் கட்சிகள் இரண்டே இரண்டு தான். அவற்றைத் தவிற வேறு கட்சிகளைப் பற்றி நாம் யோசித்ததில்லை.   இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் என் மூளைக்கு எட்டியவரை ஒரு காரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்னைப்பொறுத்தவரை மற்ற கட்சிகள் செய்யும் நற்பணிகளோ, தலைவர்களின் ஆளுமைத்திறன் பற்றியோ மக்களுக்குத்  தெரிவதில்லை.  ஒட்டுமொத்த தமிழக மக்களிடம் தம்மைக் கொண்டு சேர்க்கும் பணியை சரிவர இவர்கள் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. அந்த காலத்துல விளம்பரம் முக்கியம் இல்லாம இருந்திருக்கலாமோ என்னவோ , இந்த காலத்துல விளம்பரம் கண்டிப்பா வேணும்! மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரை பாஜாக கட்சியினர் பட்டி தொட்டி வரை எடுத்துச்சென்றனர்.

அது சரி! வேற எந்தெந்த கட்சிகளாம் இருக்கு?  அதுக்கு முன்னாடி இந்த படத்துல இருக்குறது  யார் ? பலருக்குத் தெரியாமலும் இருக்கலாம். இவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு. நல்லகண்ணு. காமராஜர்,  அண்ணாத்துரை லிஸ்ட்ல   இவரைச் சேர்க்கலாம். மிகவும் எளிமையானவர். சாதாரண மக்களோடு மக்களாக வாழும் பெரும் தலைவர் . காமராஜர் மாரி ஆட்சி அமையனும்னு  ஆசைப்பட்டா  மட்டும் போதுமா ? அதுக்கு ஏத்த தலைவர்கள தேர்ந்தெடுக்க வேண்டாமா ? தினமும் ஒன்றுக்கு இரண்டு நாழிதள்களைப் படித்துவிட்டு எனக்கும் அரசியல் தெரியும் என்று பீத்திக்கொள்ளும் நானும் இவரை மறந்துவிட்டேன்  என்பது உண்மை. இன்று 'தி இந்து' நாளிதழில் இவரைப்பற்றி கட்டுரை படித்தேன் . "அட ! ஆமா ! நம்மளும் ஒரு சிறு கட்டுரை எழுதலாமே!", என்று தோன்றியது. இவருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று நான் பிரச்சாரம் செய்யவில்லை. ஓட்டுபோடும் முன் இவரைப்போன்ற நல்ல தலைவர்களையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன் .

பலர் கம்யூனிஸ்ட் கொள்கையைக்கண்டு  பயப்படுவதும் உண்டு. சமத்துவம் என்ற பெயரில் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்வார்களோ என்ற பயம்! சரி ! வேறு யார் உள்ளார்கள் என்று பார்த்தால் , வைகோ ஒரு நல்ல பேச்சாளர் மற்றும் தலைவர். ஆனால், முதலமைச்சர் ஆவதற்கான தகுதியும் திறமையும் தன்னிடம் உண்டு என்பதை திடமாகச் சொல்லிக் கொள்ளாதவர். எனினும் தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பவர்.

அடுத்ததாக, நம்ம கேப்டன் விஜயகாந்த்! வந்து சென்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொஞ்சம் இறங்கி வேலை செய்ததில் மற்ற பெரும்பான்மைக் கட்சிகளை விட  இவர் பரவாயில்லை. மக்கள் வாட்சாப் மூலம் இவர் நடவடிக்கைகளை கேலி செய்தாலும், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு  இடத்தை பிடித்தவர். கடந்த தேர்தலில் தி.மு.க வை பின்னுக்குத் தள்ளி எதிர் கட்சியாகும் அளவுக்கு உயர்ந்தது இவரது கட்சி!

யாரும் பிடிக்கவில்லையா ?

யாரும் பிடிக்காவிட்டால் இருக்கவே இருக்கு NOTA. ஆனால், NOTA வைத் தேர்ந்தெடுக்கும் முன் இரண்டு விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் தொகுதியில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்களா என்று ஆராயுங்கள். அவர் எந்தக்கட்சியாகவும் இருக்கட்டும். மேலும், ஒரு தொகுதியில் NOTA பெரும்பான்மை பெற்றால் என்னவாகும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஓகே என்றால் யோசிக்காமல் போடுங்கள்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது உண்மை. எந்த நல்ல தலைவராவது தன்னை முன்னிருத்தமாடார்களா ! அவர்களுக்கு ஓட்டை அள்ளி இறைக்க மாட்டோமா என்று மக்கள் ஏங்கித்தவிக்கின்றனர். யாரும் வராததால் தாங்களே ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போன்றோரை முன்னிறுத்தி அழைப்பு விடுக்கின்றனர். அவர் மசிவது போல் தெரியவில்லை. பாவம் நம்ம பயலுக இப்டி பண்றனால அவர மேலிடம் தீவிரமா கண்கானிக்குதாம். மனுசனுக்கு இருக்க பிரச்சனைல இதுவேற பாவம். பேசாமே இந்த வாய்ப்ப பயன்படுத்தி நானே ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சரலாம் போலனு தோணுது ! :) அடி உதை யார் வாங்குறதுனு சைலண்ட்டா இருக்கேன். எப்படியோ இந்த தேர்தலில் என்ன நடக்கபோகிறது என்று தெரியவில்லை. அந்தந்தக் கட்சிகள் தங்களோட முதலமைச்சர் வேட்பாளர் யார்னு சொன்னா எங்களுக்கு முடிவெடுக்க கொஞ்சம் ஈசியா இருக்கும் இல்லைனா கூட்டாட்சிதான் அமையும்!

Post a Comment